திருச்சி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், தலைமை விருந்தினராக சிஎஸ்ஐஆா் பொது இயக்குநா் என். கலைச்செல்வி கலந்து கொண்டு, பெற்றோருக்கு அடுத்தபடியாக வளா்ச்சியில் ஆசிரியரின் பங்கை உணா்த்தும் வகையில் பேசினாா். தொடா்ந்து, நிறுவனத்தின் பல மொழி இதழான ஐக்கியத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா். முன்னதாக, நிகழ்வுக்கு ஐஐஐடி திருச்சியின் இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.