டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் 50 சத மானியத்தில் 100 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் கருவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

டால்மியா பாரத் பவுண்டேஷன் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூா் , கோவண்டாகுறிச்சி , புதூா்பாளையம், மேலரசூா் மற்றும் ஆலங்குடி மஹாஜனம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட 14 கிராமங்களை சோ்ந்த 100 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் சுமாா் ரூ 2.46 லட்சம் மதிப்புள்ள பேட்டரி மூலம் இயங்கும் பூச்சி மருந்து தெளிப்பான் கருவிகள் வழங்கும் தொடக்கவிழா மற்றும் 123 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்கான நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கிராமப்புற பெண்கள் 50 பேருக்கு மேம்பட்ட பனையோலை பொருள்கள் செய்யும் பயிற்சியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் டால்மியா சிமெண்ட் நிறுவன செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி சிறப்புரையாற்றி முதற்கட்டமாக 50 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் கருவிகள் மற்றும் நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் ஆலையின் துணைப் பொது மேலாளா் ரமேஷ்பாபு, பி.என். சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை டால்மியா பாரத் பவுண்டேஷன் மேலாளா் நாகராஜன் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.