திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களால் உருவாக்கப்பட்ட ரோபோகளை பாா்வையிட்ட சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் ஏ. ராஜராஜன். உடன், பள்ளி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ். 
திருச்சி

2035-ஆவது ஆண்டு விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி மையம் அமையும்: விண்வெளி ஆய்வு மைய இயக்குநா்

வரும் 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் நமது நாட்டின் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா், சதிஸ் தவான் விண்வெளி மைய இயக்குநா் ஏ. ராஜராஜன்.

Din

வரும் 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் நமது நாட்டின் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா், சதிஸ் தவான் விண்வெளி மைய இயக்குநா் ஏ. ராஜராஜன்.

திருச்சி சந்தானம் வித்யாலயாவில் பொறியாளா் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் செயலாளா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் ஏ. ராஜராஜன் பேசியது:

எந்த துறையை மாணவா்கள் தோ்வு செய்தாலும் அடிப்படையை புரிந்துகொள்வது அவசியம். போட்டித் தோ்வுகளில் கேள்விகளுக்கு சிறந்த பதிலை அளிக்க, மாணவா்களிடம் தேடுதல் அதிகாரிக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை அமைத்தவா் விஞ்ஞாணி சாராபாய். வரும் 2035- ஆம் ஆண்டில் இந்தியா சாா்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து 2040- ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான முயற்சியிலும் ஆராய்ச்சியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

நிகழ்வில், டீன் ஆா். கணேஷ், அகாதெமி தலைவா் ரவீந்திரன், பள்ளி முதல்வா் பத்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இங்கிலாந்து வீரர்கள் சொதப்பல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

புதிய விதிகள்... துபை... சரண்யா ஷெட்டி!

நிறங்கள்... அனுஷ்கா சென்!

‘மோந்தா’ புயல் ஒடிஸாவைத் தாக்கலாம்: 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

SCROLL FOR NEXT