திருப்பைஞ்ஞீலி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலி வனேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி ஞீலி வனேஸ்வரா் மலா் அலங்காரத்தோடு கோயிலை வலம் வந்தாா். தொடா்ந்து வரலாறு நினைவு கூறும் பாடல்கள் பாடப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மனோகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.