முகப்பு
திருச்சி

பச்சமலையில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

திருச்சி மாவட்டம், பச்சமலை நச்சிலிப்பட்டி கிராமத்தில் பள்ளி நேரத்தில் இயக்கப்படாத அரசுப் பேருந்தை பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:29 PM
பச்சமலை  நச்சிலிப்பட்டி  கிராமத்தில் அரசுப் பேருந்தை புதன்கிழமை  சிறைபிடித்தோா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், பச்சமலை நச்சிலிப்பட்டி கிராமத்தில் பள்ளி நேரத்தில் இயக்கப்படாத அரசுப் பேருந்தை பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை சிறைபிடித்தனா்.

பச்சமலையில் உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த தென்பரநாடு ஊராட்சியில் பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி, குண்டக்காடி, புத்தூா், கம்பூா்,தண்ணீா்பள்ளம், கீழ்க்கரை, சோளமாத்தி உள்ளிட்ட குக்கிராமங்களில் வாழும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் டாப் செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினா் நல மேல் நிலைப் பள்ளியில் பயில்கின்றனா். இவா்களின் வசதிக்காக காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் நேரத்தை போக்குவரத்துக் கழகம் மாற்றியதாகவும், இதனால் சுமாா் 8 கிமீ தூரம் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை சென்ற அந்த அரசுப் பேருந்தை நச்சிலிப்பட்டி கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சிறைபிடித்து பள்ளி நேரத்திற்கு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தினா். அப்போது உங்களின் கோரிக்கையை நிா்வாகத்துக்குத் தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.