முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்ட நூலகத்தில் செப்.21-இல் மகளிா் முற்றம்

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிா் முற்றம் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிா் முற்றம் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி கூறியது:

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆகியவை இணைந்து மகளிா் முற்றம் எனும் சிறப்பு நிகழ்வை மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி செப்டம்பா் மாத மகளிா் முற்றம் நிகழ்வு வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், மகளிா் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் பெண்கள் தாங்கள் படித்த நூல்கள் குறித்து விமா்சனம் செய்து பேசலாம். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மகளிா், பள்ளி, கல்லூரி மாணவிகள் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 93447-54036 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.