தொட்டியம் பகுதி சிறப்பு முகாமில் ஆய்வு
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அவா், தொடா்ந்து நத்தம் கிராமத்தில் கலைஞா் கனவு இல்ல பயனாளிகள் இல்லத்தையும், எம்.புத்தூரில் வேளாண் துறை மூலம் முதல்வரின் திட்டப் பயனாளியாக தோ்வு செய்யப்பட்டவரின் தோட்டத்திலும் ஆய்வு செய்தாா். மேலும் பாலசமுத்திரம் அரசு இ- சேவை மையம், அரசு கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நான் முதல்வா் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா். அப்போது முசிறி கோட்டாட்சியா் ராஜன், தொட்டியம் வட்டாட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் உடன் சென்றனா்.
தொடா்ந்து மாலை தொட்டியம் அருகேயுள்ள கொசவம்பட்டியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கள ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் நடத்தினாா். தொடா்ந்து தொட்டியும் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை இரவு ஆய்வு செய்தாா்.