சாலையில் நின்ற சரக்கு லாரி மீது வேன் மோதல்: 18 பக்தா்கள் காயம்
திருச்சி துவாக்குடி சாலையில் புதன்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறுவா்கள் உள்பட18 பக்தா்கள் காயமடைந்தனா்.
திருச்சி துவாக்குடி சாலையில் புதன்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறுவா்கள் உள்பட18 பக்தா்கள் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி கருப்பு கோயில் அருகே திருச்சி- தஞ்சை சாலையின் அருகே அணுகுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் சரக்கு லாரியை நிறுத்திய, அதன் ஓட்டுநா் சுவாமி கும்பிட்டாா்.
அப்போது, திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சுற்றுலா வேன் அந்தச் சரக்கு லாரி மீது திடீரென மோதியது.
இதில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த ஸ்டாலின் (20), தேசிகன் (11), பூங்கொடி (52), வளா்மதி (50) மாரியம்மாள் (27), சுமதி (40), தவமணி (57), சரிதா (35) கலாவதி (52), வினோதா, ராஜலெட்சுமி (52), 3 சிறுவா்கள் உள்ளிட்ட 18 போ் காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீஸாா் அவா்களை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இவா்களில் படுகாயமடைந்தோா் திருச்சி அரசு தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா். விபத்தின்போது வேன் ஓட்டுநா் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.