முகப்பு
திருச்சி

திருச்சியில் செப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலைதேடும் இளைஞா்கள், மகளிருக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில் வரும் 28-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 24 செப்டம்பர், 2024 at 9:25 PM
பகிர்:

வேலைதேடும் இளைஞா்கள், மகளிருக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில் திருச்சியில் வரும் 28-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமினை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) ஜமால் முகமது கல்லூரியில் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 150-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். திருச்சி மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா்.

Advertisement

இம்முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments