திருச்சியில் வாகனத்தில் நின்றபடி சாலைவலம் செல்லும் விஜய்!
திருச்சியில் சாலைவலமாக செல்லும் விஜய்...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வாகனத்தின் நின்றபடி சாலைவலமாக தவெக தலைவர் விஜய் சென்றுகொண்டுள்ளார்.
தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் இன்று காலை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
Advertisement
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், பிரசார வாகனத்தில் பாலக்கரை நோக்கிச் சென்று கொண்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு வரவேற்பு அளித்து வரும் நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி பயணித்து வருகிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே பகல் 12.30 மணிக்கு மேல் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.