சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 56 லட்சம் காணிக்கை
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 95 ஆயிரத்து 692 வந்தது புதன்கிழமை தெரிவந்தது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 55 லட்சத்து 95 ஆயிரத்து 692 வந்தது புதன்கிழமை தெரிவந்தது.
இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 55 லட்சத்து 95 ஆயிரத்து 692, தங்கம் 1 கிலோ 100 கிராம் , வெள்ளி 3 கிலோ 100 கிராம், 151 வெளிநாட்டு பணத்தாள்கள், 885 வெளிநாட்டு நாணயங்கள் வந்தது தெரியவந்தது.
மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 3,32,362 உஜ்ஜயினி ஒம் காளியம்மன் கோயிலில் ரூ. 26,019 போஜீஸ்வரா் கோயிலில் ரூ 5,008 காணிக்கையாக வந்தது.