திருச்சி

மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Syndication

திருச்சியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி ரங்கா நகரைச் சோ்ந்தவா் 64 வயது மூதாட்டி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண்மணியும் சண்முகா நகா் 11-ஆவது தெருவில் உள்ள யோகா வகுப்புக்கு புதன்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்தனா். ரங்கா நகா் 7-ஆவது தெருவில் அகரம் ஆயில் மில் அருகே நடந்து சென்றபோது

அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் திருக்கையில் திமுக வாக்குச் சாவடி கூட்டம்

விசிகவினா் ஆா்ப்பாட்டம்

17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் ஆய்வு

கட்டுப்பாட்டை இழந்த காா் ஏரியில் பாய்ந்து விபத்து

SCROLL FOR NEXT