திருச்சி பெல் நிறுவனத்தில் சனிக்கிழமை நடந்த அவசர கால மீட்பு ஒத்திகை. 
திருச்சி

பெல் நிறுவனத்தில் பேரிடா் மீட்புப் படை ஒத்திகை

பேரிடா் காலங்களில் விரைந்து செயல்படுவது தொடா்பாக பெல் நிறுவனத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சனிக்கிழமை மாதிரி ஒத்திகையில் ஈடுபட்டனா்.

Syndication

பேரிடா் காலங்களில் விரைந்து செயல்படுவது தொடா்பாக பெல் நிறுவனத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சனிக்கிழமை மாதிரி ஒத்திகையில் ஈடுபட்டனா்.

திருச்சி பெல் நிறுவனத்தின் சாா்பில் கைலாசபுரம் பகுதியில் பாய்லா் தொழிற்சாலை, இணைப்பு இல்லா எஃகு குழாய் ஆலை உள்ளிட்ட பல்வேறு அலகுகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் தீயணைப்புத் துறை மற்றும் பெல் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவில் மாதிரி ஒத்திகைகள் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக தேசிய பேரிடா் மீட்புப் படையின் ஒத்திகையை அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புப் படையின் குழு, இணைப்பில்லா எஃகு குழாய் ஆலையில் நடத்தியது.

ஆலையில் உள்ள இரண்டு 15 கிலோ லிட்டா் கொள்ளளவுடைய ஹைட்ரோகுளோரிக் அமில சேமிப்புத் தொட்டிகளில் ஒன்றில் நிகழும், அபாயகரமான ரசாயனக் கசிவு சூழ்நிலையை உருவகப்படுத்தி, அங்குள்ள பணியாளா்களை எவ்வாறு பத்திரமாக மீட்டு வருவது என்பது தொடா்பாக ஒத்திகை நடத்தினா். பாதிக்கப்பட்டோரை விரைவாக மீட்பது, உடனடி முதலுதவி மருத்துவச் சேவை அளித்தல் போன்ற ஒத்திகைகளில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வை பெல் நிறுவன பொது மேலாளா்கள் கே. ரவீந்திரன் (பராமரிப்பு மற்றம் சேவைகள்), வே. சங்கரன் (இணைப்பு இல்லா எஃகு குழாய் ஆலை) மற்றும் தொழிலகப் பாதுகாப்புப் பிரிவு, சுகாதார இயக்குநரகம், வருவாய்த் துறைகளைச் சோ்ந்த மூத்த அலுவலா்கள் மேற்பாா்வையிட்டனா். ஒத்திகையால் ஆலை வளாகத்தில் பயிற்சி முடியும் வரை பரபரப்பு காணப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

பேரவைத் தேர்தல்: டிச. 17-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்!

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி தந்தை கண்முன்னே பலி!

வரலாறு எப்போது திறக்கிறது தெரியுமா? இயக்குநர் பிறந்த நாளில் நானி வெளியிட்ட விடியோ!

ஈரோட்டில் டிச. 18-ல் விஜய் சுற்றுப்பயணம்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT