திருச்சி பாலக்கரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
திருச்சி

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்காததைக் கண்டித்து போராட்டம்

திருச்சி தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி

திருச்சி தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க பணம் செலுத்தி 4 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காமல் இருப்பதையும், அவா்களில் 5 பேருக்கு விசாரணை முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை வீடு ஒதுக்காததைக் கண்டித்தும், அவா்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடந்தது.

திருச்சி பாலக்கரையில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கட்சி கல்மந்தை கிளை செயலா்கள் மகாலிங்கம், சங்கீதா ஆகியோா் தலைமை வகித்தனா். திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், உடனடியாக வீடு ஒதுக்கப்பட்டு வரும் 2 ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT