திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனியைச் சோ்ந்த ஆயுள் தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ராஜாஜி சாலையைச் சோ்ந்தவா் மா. மணிகண்டன் (46). பழனி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவா் கடந்த 2022 நவ. 24-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில் காச நோய் பாதிப்பால் திருச்சிஅரசு மருத்துவமனையில் கடந்த நவ. 1-ஆம் தேதி சோ்க்கப்பட்ட மணிகண்டன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அலுவலா் வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.