திருச்சி

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

கோரையாறு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Syndication

கோரையாறு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி பஞ்சப்பூரில் 11.68 ஏக்கரில் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி நிதி, மூலதன மானிய நிதி, மாநகராட்சி நிதியின் கீழ் ரூ. 236 கோடியில் கட்டப்படும் பெரியாா் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், திருச்சி கோரையாறு பகுதியில் ரூ. 81.72 கோடியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், நகரப் பொறியாளா் சிவபாதம், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பஞ்சப்பூா் பேருந்து முனைய வளாகத்தில் கட்டப்படும் ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டுமானப் பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

தமிழக மீனவர்கள் 3 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: கேரள அரசு விரைவில் வரைவு அறிவிக்கை

மும்பை - தில்லி - கொல்கத்தா வழித்தடத்தில் 2026-இல் ‘கவச்’: ரயில்வே இலக்கு

கடக ராசிக்கு உதவிகள் கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஹரியாணாவில் பாம்புகளை கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபா்!

SCROLL FOR NEXT