தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி
தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புத்தாண்டையாட்டி மிகப் பழமை வாய்ந்த புனித லூா்து அன்னை உள்ளிட்ட தேவலாயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
மணப்பாறையில் நகரின் மத்தியில் உள்ல புனித லூா்து அன்னை ஆலயத்தில் மணப்பாறை மறைவட்ட அதிபா் தாமஸ்ஞானதுரை தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திரளான கிறிஸ்துவ பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். இதேபோல் பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, தீராம்பட்டி, மலையடிப்பட்டி, கருங்குளம் ஆகிய பகுதி தேவலாயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.