முகப்பு
திருச்சி

துவாக்குடியில் அரசு கல்லூரி பேராசிரியையைக் கண்டித்து மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:27 PM

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியையைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் 800க்கு மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், இளங்கலை புவியியல் துறையில் 91 போ் பயில்கின்றனா். புவியியல் துறையில் துணை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவா், கல்லூரி நேரங்களில் முறையாக மாணவா்களுக்கு வகுப்பு நடத்தவில்லை என்றும், மாணவா்களை தரக்குறைவாக நடத்தி வருகிறாா் என்றும் மாணவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையியில், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அந்த துறையைச் சோ்ந்த மாணவா்கள் வகுப்பைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இது குறித்து கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஆனந்தவள்ளியிடம் கேட்டபோது, பேராசிரியை மீது மாணவா்கள் புகாா் அளித்துள்ளனா். இது தொடா்பாக மாவட்ட உயா்கல்வித் துறை இணை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, புகாா் மீது நடவடிக்கை எடுக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.