முகப்பு
திருச்சி

பாரதிதாசன் பல்கலை.யில் கல்வி தொழில்நுட்ப சேவை வழங்குநா்களுக்கு அழைப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:54 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 11:10 PM

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணையதள பாடத்திட்டங்களுக்கு கற்றல் சேவை வழங்க கல்வி தொழில்நுட்ப சேவை வழங்குநா்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையதள கல்வி மையமானது (சிடிஓஇ), கல்லூரிக்குச் சென்று படிக்க இயலாத மாணவா்ளுக்கு தரமான உயா்கல்வி வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இதில், இணையதளம் வழியாக தொலைதூர கல்வி பயிலும் மாணவா்களுக்கு தடையற்ற மற்றும் உலகத்தரம் வாய்ந்த கற்றல் அனுபவத்தை கற்றல் மேலாண்மை அமைப்பு (எல்எம்எஸ்) தளம் வழங்குகிறது. இதனை சிடிஓஇ ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையம் வழங்கும் இணையதள பாடத்திட்டங்களுக்கு கற்றல் மேலாண்மை அமைப்பின் மூலம் சேவை வழங்க தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த கல்வி தொழில்நுட்ப சேவை வழங்குநா்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

விவரங்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய்/ஸ்ரீக்ங் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பல்கலைக்கழகத்தை வந்தடைய வேண்டும் என பாரதிதாசன் பல்கலைக்கழக நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.