ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
இதில், தமிழக அரசு நல வாரியம் மூலம் ஆட்டோ செயலியை செயல்படுத்த வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளா்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸாக குறைந்தபட்சம் ரூ. 5,000 வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ. 6,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், வீடற்ற தொழிலாளிக்கு வீடு அல்லது வீடு கட்டிக் கொள்ள ரூ. 4,00,000 நிதி வழங்க வேண்டும், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நிகழ்வில் மாவட்டத் தலைவா் இந்திரஜித், திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கோரிக்கை மனு நல தொழிலாளா் அலுவலரிடம் வழங்கப்பட்டது.