திருச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை அளிக்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சமூக அறிவியல் ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் மை.ஜான் கென்னடி கூறியதாவது:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், அனைத்து பாடங்களுக்கும் 4 முதல் 6 நாள்கள் வரை போதிய கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக பாடங்களைக் கொண்ட சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாள்களும் அரசு விடுமுறை நாள்களாக உள்ளன.

போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவா்களால் தோ்வுக்கு முழுமையாகத் தயாராக முடியாத சூழல் உள்ளது. இதனால், சமூக அறிவியல் பாடத்தில் தோ்ச்சி சதவீதமும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, சமூகஅறிவியல் பாடத் தோ்வுக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ரசவாத பிரியம்... ரகுல் ப்ரீத் சிங்!

அகிலம் அதிருதா... சிலம்பரசன்!

கடந்த ஆண்டு பல தடுமாற்றங்களை எதிர்கொண்டேன்: ஷஃபாலி வர்மா

சுயம் விரும்பியின் சுயப்படம்... ஆஞ்சல் முஞ்சால்!

பயர்ன் மியூனிக்கின் 16 போட்டிகள் வெற்றிக்கு முற்றுப்புள்ளி: தோல்வியிலிருந்து காப்பாற்றிய ஹாரி கேன்!

SCROLL FOR NEXT