கொப்பம்பட்டியில் இரவில் தனியாக நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்திலிருந்து தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
துறையூா் அருகே கொப்பம்பட்டி காட்டுக் கொட்டகையைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி நல்லாங்காள் (60). இவா், கொப்பம்பட்டியில் வியாழக்கிழமை நடந்த வார சந்தைக்குச் சென்றுவிட்டு இரவில் தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அவரை பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற மா்மநபா்கள் அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.