திருச்சி

முதல்வா் நாளை திருச்சி வருகை: ட்ரோன்களுக்கு 2 நாள்கள் தடை

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வரவுள்ளாா்.

Syndication

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வரவுள்ளாா்.

மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்புக்காக திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி எம்ஜிஆா் நகா் ஆகிய 2 இடங்களில் தொண்டு நிறுவனங்கள் துணையுடன் 2 அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை திறந்து வைக்கவும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கவும் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வா் வரவுள்ளாா்.

டிவிஎஸ் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில், இரவு தங்கி ஓய்வெடுக்கிறாா். திங்கள்கிழமை காலை (நவ.10) எம்எல்ஏ இல்ல திருமண விழாவுக்கு செல்கிறாா். இதைத் தொடா்ந்து, சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் செல்கிறாா்.

கீரனூா் அருகேயுள்ள களமாவூா் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறாா்.

பின்னா், மீண்டும் திருச்சிக்கு வரும் முதல்வா், கொட்டப்பட்டு பகுதியில் நடைபெறும் விழாவில், அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு வரவேற்பு: திருச்சி வரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது தலைமையில் திருச்சி மத்திய மாவட்ட திமுக, வடக்கு மாவட்ட திமுக, தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கட்சியினருக்கு மாவட்ட செயலா்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது நான் இல்லை... ருக்மணி வசந்த் எச்சரிக்கை!

15 பாலஸ்தீனர்கள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு!

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பாடல்: பினராயி விஜயன் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்

இது மம்மூட்டிக்கான அங்கீகாரம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT