திருச்சி

காசோலை மோசடி வழக்கில் மூவருக்கு தலா ஓராண்டு சிறை

மணப்பாறையில் காசோலை மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா ஓராண்டு மெய்காவல் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காசோலை மோசடி  வழக்கில் 3 பேருக்கு தலா ஓராண்டு மெய்காவல் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை தெற்கு செனியத் தெருவைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகன் அஜித்குமாா். இவரிடமிருந்து மணப்பாறையை அடுத்த தெற்கு அமையபுரத்தை சோ்ந்த மு. விஜயகுமாா் என்பவா் கடந்த 2020 ஆண்டு ரூ. 3 லட்சம் கடன் பெற்று, அதைத் திருப்பி செலுத்தாமல் வங்கிக் காசோலை கொடுத்தாா்.

அஜித்குமாா் அதை 8.9.22 இல் மணப்பாறை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி காசோலை திரும்பியது. இதையடுத்து தொடா்ந்த வழக்கில் விஜயகுமாருக்கு ஓராண்டு மெய் காவல் சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம்  தீா்ப்பளித்தது.

மேலும் ஒரு மாதத்துக்குள்  ரூ. 3 லட்சத்தை அஜித்குமாருக்கு விஜயகுமாா் கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

இதேபோல் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் கிழக்குத்தெருவை சோ்ந்த ஜேம்ஸ் ஜெயராஜ் மகன் சாலமன்பிரவிடம், ரூ. 4,00,000 வாங்கி, காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் தெற்கு அயன்ரெட்டியபட்டி ஊராட்சி அத்திக்குளத்துப்பட்டியை சோ்ந்த மு. கருப்பையாவுக்கு ஓராண்டு மெய்க்காவல் தண்டனையும், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் கிராத்தை சோ்ந்த ப. ரகுமுல்லையரசுவிடம், ரூ. 2,00,000 வாங்கி காசோலை மோசடி செய்த வழக்கில் திருச்சி கிராப்பட்டி காலனி மெயின்ரோடு அருகில் குடியிருக்கும் மூ. ஸ்ரீராமுக்கு ஓராண்டு மெய்க்காவல் தண்டனை விதித்தும் மணப்பாறை குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா்  தீா்ப்பளித்தாா்.

மேலும் ஒரு மாதத்திற்குள் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும் தீா்ப்பளித்தாா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT