கோப்புப் படம் 
திருச்சி

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 11, 12 ஆம் தேதிகளில் தஞ்சாவூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - தஞ்சாவூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 11, 12- ஆம் தேதிகளில் காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 16-ஆம் தேதி ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

அறிவிப்பு மாற்றம்: மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலானது (16833) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாள்களில் ஏற்கெனவே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பகுதி ரத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தட மாற்றம்: திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது (16843) வரும் 12-ஆம் தேதி சிங்காநல்லூா், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து இருகூா், போதனூா் வழியாக இயக்கப்படும

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT