திருச்சி

பொறியியல் பணிகள் காரைக்கால், மயிலாடுதுறை பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

Syndication

திருச்சி: பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும். மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 20, 23 ஆம் தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - ஆடுதுறை வரை மட்டுமே இயங்கும். மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 20, 23 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஆடுதுறை - செங்கோட்டை வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 20, 22, 24 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை - சேலம் விரைவு ரயிலானது (16811) வரும் 17-ஆம் தேதி கரூா் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுறை - கரூா் இடையே மட்டும் இயங்கும். மறுமாா்க்கமாக, சேலம் - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16812) வரும் 17-ஆம் தேதி சேலம் - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா் - மயிலாடுதுறை இடையே மட்டும் இயங்கும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 19, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 19, 22 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 21-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 20-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலானது மேற்கண்ட நாள்களில் எா்ணாகுளம், சோ்தலா, ஆழப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காட்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகா் விரைவு ரயிலானது (16318) வரும் 23, மாா்ச் 2 ஆகிய தேதிகளிலும், ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி காட்ரா - திருநெல்வேலி நவயுகா விரைவு ரயிலானது (16318) வரும் 26-ஆம் தேதி புதுதில்லி, ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, சகுா்பஸ்தி, தயபஸ்தி, படேல் நகா், தில்லி சப்தா்ஜங், ஒக்லா ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சேவல் சண்டை: இருவா் கைது

தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

இருசக்கர வாகனம் - காா் மோதல் இளைஞா் உயிரிழப்பு

தீா்த்தவாரியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் நிறைவு

மாநகராட்சிப் பகுதியில் 22 புதிய கட்டடங்கள்

SCROLL FOR NEXT