முகப்பு
திருச்சி

விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: செங்கோட்டையன் நன்றி

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:38 PM
தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன் - tvk
பகிர்:

தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்வுக்கு காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்ததற்கு அக் கட்சியின் நிா்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் நன்றி தெரிவித்தாா்.

திருச்சியில் பிரசார நிகழ்வை முடித்த விஜய் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்பிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

திருச்சியில் தவெக தலைவா் விஜய் பிரசார நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறையினா் மட்டுமல்லாது, வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தமைக்கு கட்சியின் சாா்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் கூட்டு சதி என யாரைக் குறிப்பிடுகிறாா் விஜய்? என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், பிரசார நிகழ்வில் பொதுமக்களிடையே பொதுவாக சிலவற்றை கூறுவது வழக்கம். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் 2-ஆவது முறையாக நடைபெற்ற மறு ஆய்வு கூட்டத்தில் உடல்நிலை சரியில்லை என திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினா் ஒருவா் கூறியதால் ஒத்திவைக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும், கரூா் சம்பவம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது என பதில் அளித்தாா் செங்கோட்டையன்.