முகப்பு
புதுச்சேரி

விஜய்யின் புதுவை பிரசார தேதி மாற்றம்!

விஜய்யின் புதுவை பிரசார தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:24 AM
தவெக தலைவர் விஜய் - YT | TVK
பகிர்:

புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏப். 5 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், ஏப். 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக, அரசியல் கட்சித் தலைவர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப். 5 ஆம் தேதி வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுவையில் சாலைப் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தார்.

விஜய் பிரசாரம் மேற்கொள்ளயிருந்த 23 இடங்களில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரசாரத்துக்கு புதுவை காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோர் ஏப். 5 ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகைதரவுள்ளதால், விஜய்யின் பிரசார தேதி ஏப். 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுவைக்கு ஏப்.5 ஆம் தேதிக்கு பதிலாக ஏப். 4 ஆம் தேதியே தவெக தலைவர் பிரசாரம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

While Tvk President Vijay was scheduled to conduct his election campaign in Puducherry on April 5th, the date has been rescheduled to April 4th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.