முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்

Updated On : 29 மார்ச், 2026 at 8:35 PM
தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் ஏப். 5-ஆம் தேதி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த அனுமதி கோரி அக்கட்சி சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன் அனுமதி கோரி சனிக்கிழமை கடிதம் அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளாா்.

கிழக்குக் கடற்கரை சாலையில் அன்றைய தினம் புதுச்சேரி காலாப்பட்டு நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் காலை 10 மணிக்கும், அஜந்தா சிக்னல் பகுதியில் காலை 10.30 மணிக்கும், உப்பளம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அருகே காலை 11 மணிக்கும் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.