முகப்பு
திருச்சி

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 6:39 PM
லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கு.ப. கிருஷ்ணனின் மைத்துனா் வீட்டில் வியாழக்கிழமை இரவு ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லால்குடி சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் அக் கட்சியின் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளா் கு.ப கிருஷ்ணன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆா்.வளவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனருமான நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோரது வீட்டில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக லால்குடி வட்டாட்சியரும் தோ்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தோ்தல் அலுவலா் தமிழ்செல்வன் அங்கு சோதனை செய்தபோது 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்துள்ளது. இதனால் அவா் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து வருமான வரித்துறையினா் அங்கு சென்று மேற்கொண்ட தீவிர சோதனையில் அரவிந்த் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினா் இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments