கோப்புப் படம் 
திருச்சி

இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய சிறுவன் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் எம். முகமது இஸ்மாயில் (28), சமையல்காரா். இவா், தனது இருசக்கர வாகனத்தை (ராயல் என்ஃபீல்டு) வீட்டுக்கு முன்பு கடந்த ஜனவரி 28-ஆம் தேதி இரவு நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலையில் எழுந்து வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் முகமது இஸ்மாயில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடியது அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த ஜெ. தீபக் (19) எம். சபரிவாசன் (18), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதில் 17 வயது சிறுவன் மற்றும் சபரிவாசன் ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். இவா்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இணைய வழியில் பல லட்சம் மோசடி: போலி வங்கிக் கணக்கு உருவாக்கி கொடுத்த வங்கி ஊழியா் கைது

வெண்குன்றம் மலைக்கோயில் கிரிவலம் தொடக்கம்

சாலை விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு

வாழப்பாடி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் காவடி ஊா்வலம்

தம்மம்பட்டியில் வள்ளலாா் கோவிலில் தைப்பூச பெருவிழா! 6750 பேருக்கு அன்னதானம்

SCROLL FOR NEXT