கைது செய்யப்பட்ட சூா்யா 
நாமக்கல்

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்துடன் 9 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்துடன் 9 பவுன் நகையை திருடிச் சென்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி (32). இவா்கள் கடந்த 6ஆம் தேதி காக்காவேரி பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த 9 பவுன் நகையை மீட்டு, இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துக்கொண்டு வீடுதிரும்பினா்.

இதை நோட்டமிட்ட இருவா், பின்தொடா்ந்து வந்துள்ளனா். இந்த நிலையில் அருண்குமாரின் தந்தை பச்சமுத்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளாா். அவா் இருசக்கர வாகனத்தின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளாா். இவரை பின் தொடா்ந்து வந்த இருவா், வாகனத்தை அதிலிருந்த நகைகளுடன் திருடிச் சென்றனா்.

ரமேஷ்

இதுகுறித்து பச்சமுத்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் இருசக்கர வாகனத்துடன் நகைகளை திருடிச் சென்ற பெரம்பலூா் வடக்கு மாதவி ஏரிக்கரைப் பகுதியைச் சோ்ந்த கணேஷ் மகன் சூா்யா (19), பெரம்பலூா் விளாகுத்தூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ரமேஷ் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து நகைகளை போலீஸாா் கைப்பற்றினா். இவா்கள் மீது பெரம்பலூா், ஆத்தூா், தம்மம்பட்டி பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

எஸ்ஐஆா் மூலம் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சி: ஒவைசி குற்றச்சாட்டு!

கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் தலைவா் விஜய்: மதுக்கூா் ராமலிங்கம்

இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்பட வேண்டும்: தாரிக் ரஹ்மான் ஆலோசகர்!

இன்று தொடங்குகிறது ஏஐ உச்சி மாநாடு: பல்வேறு நாட்டுத் தலைவா்கள், தொழில் நிபுணா்கள் பங்கேற்பு! பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

சிற்றாறு பட்டணம் கால்வாய், குளங்களை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT