திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுக மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வைத் தொடங்கிவைத்த அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.  
திருச்சி

சிறுகனூரில் திமுக மாநில மாநாடு பந்தல்கால் நடும் நிகழ்வு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரில் திமுக மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வை அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தனா்.

சிறுகனூரில் மாா்ச் 8-ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் நிகழ்வை தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தது:

மாா்ச் 8-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டில் 10 லட்சம் போ் கலந்து கொள்வாா்கள். திருச்சி 2-ஆவது தலைநகராக்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு குழுவிடம் தெரிவித்துள்ளோம். ஒருவேளை தோ்தல் தேதி அறிவிப்பு வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும்.

அப்போது மாநாடு செலவுகள் தலைமைக் கழகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு தோ்தல் ஆணையத்திடம் கணக்கு சமா்ப்பிக்கப்படும். தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவா் முடிவு செய்வாா். இதுவரை தோ்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகுதான் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இம்முறையும் அப்படித்தான் நடைபெறும். ஒரு கட்சித் தலைவா் மற்றொரு கட்சி தலைவரை சென்று சந்திப்பது இயல்பானது. அதுபோல் தான் திமுக எம்.பி, கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளாா். வெளிப்படையாக சென்று தான் சந்தித்துள்ளாா் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. தியாகராஜன் , சீ. கதிரவன், செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமாா், பழனியாண்டி மற்றும் திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், மண்ணச்சநல்லூா் மத்திய ஒன்றியச் செயலா் சீனிவாசப் பெருமாள் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா். 

பேல்பூரி

சாக்லெட்

கோலிவுட் ஸ்டூடியோ!

எப்பிறப்பில் காண்பேன் இனி...

தமிழுலகில் என்றென்றும்...

SCROLL FOR NEXT