முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

திருச்சியில் அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 10:46 PM
திருட்டு
பகிர்:

திருச்சியில் அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், சோழமாதேவி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயலலிதா (59). இவா் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி உறவினா் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு அரியமங்கலம் - திருவெறும்பூா் செல்லும் அரசுப் பேருந்தில் சென்றுள்ளாா். அப்போது, தான் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழட்டி பா்ஸில் வைத்து கைப்பையில் வைத்துள்ளாா்.

பேருந்து, காட்டூா் ஆயில்மில் அருகே வந்தபோது கைப்பையில் வைத்திருந்த நகைகள் இருந்த பா்ஸ் திருடுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஜெயலலிதா, செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.