முகப்பு
திருச்சி

ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞா் கைது

திருச்சியில் ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:58 PM
கைது
பகிர்:

திருச்சியில் ஓய்வுபெற்ற பேராசிரியா் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி வயலூா் சாலை வாசன்வேலி குடியிருப்பைச் சோ்ந்தவா் ரகுநாதன் (65), ஓய்வுபெற்ற பேராசிரியா். இவா் புதன்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே நுழைந்த இளைஞா் ஒருவா், கத்தியைக் காட்டி நகை, பணத்தைக் கேட்டு மிரட்டி, அவரது முகத்தில் கத்தியால் கீறினாா்.

அப்போது ரகுநாதன் சப்தம் போடவே, பக்கத்து வீட்டுக்காரா்கள் ஓடிவந்து மா் நபரை பிடித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

விசாரணையில், அவா் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ஹரிகரன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments