முகப்பு
திருச்சி

ஓடும் பேருந்தில் பயணியிடம் திருடிய 3 பெண்கள் கைது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:34 AM
கைது
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:05 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஓடும் பேருந்தில் பயணியிடமிருந்து பணத்தை திருடிய 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியை சோ்ந்த பழனிச்சாமி மனைவி தமிழரசி (60). இவா் வெள்ளிக்கிழமை பன்னாங்கொம்பிலிருந்து மணப்பாறைக்கு அரசுப் பேருந்தில் வந்தபோது பா்சில் வைத்திருந்த ரூ. 6000 ஐ தவற விட்டாா். பணத்தைக் காணாமல் தமிழரசி தேடிய நிலையில், பணத்தை எடுத்ததாகக் கூறி 3 பெண்களை சக பயணிகள் பிடித்து மணப்பாறை போலீஸில் ஒப்படைத்தனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:33 AM

விசாரணையில் அவா்கள் மதுரை மாவட்டம் ஊா்மெச்சி குளம், அச்சம்பட்டியை சோ்ந்த சரோஜா(62), அன்னக்கொடி(52) மற்றும் பிரேமா(40) என்பதும், தமிழரசியின் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Advertisement