முகப்பு
திருச்சி

மக்காச்சோளத்துக்கு உத்தரவாத விலை நிா்ணயம்: எம்.பி. வலியுறுத்தல்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:08 AM
துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:12 PM

மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: அரியலூா், பெரம்பலூா், நெல்லை, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது.

மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு சதவீத செஸ் வரியால் விவசாயிகள் கடும் கவலையடைந்து, அதை நீக்க வலியுறுத்தியதால் முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக அதை ரத்து செய்தாா்.

Advertisement

தற்போது மக்காச்சோள விவசாயிகளுக்கு மேலும் ஒரு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சந்தையில் மக்காச்சோள விலை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கின்றனா். அவா்களது உழைப்புப் பயனின்றி போகிறது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:08 AM

மக்காச்சோள உற்பத்திச் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,000, 2200 என இருக்கும் நிலையில் தற்போது சந்தை விலை ரூ.1,700 முதல் ரூ.1,800 வரை சில இடங்களில் அதற்கு கீழும் வீழ்ந்துள்ளது.

இந்த இழப்பை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 மானியம் வழங்கினால், விவசாயிகளின் நஷ்டத்தில் அரசு பங்கேற்பதாக அமையும்.

இது அவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, மக்காச்சோள விவசாயத்தையும் தக்கவைக்கும். அண்டை மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழக அரசும் குறைந்தபட்ச உத்தரவாத விலை மற்றும் மானியம் வழங்கி மக்காச்சோள விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.