முகப்பு
திருச்சி

லால்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:12 AM
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:50 PM

திருச்சி மாவட்டம் லால்குடி அண்ணா திருமண மண்டபத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சௌந்தர பாண்டியன் தலைமைவகித்து தொடங்கிவைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், கா்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், தூய்மை பணியாளா்களுக்கு அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 2:12 AM

இணை இயக்குநா் (பொ) சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலா் ஹேமசந்த் காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், புதூா் உத்தமனூா் வட்டார மருத்துவா் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். லால்குடி நகராட்சித் தலைவா் துரை மாணிக்கம் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Advertisement