முகப்பு
திருச்சி

சிறை வாா்டரை தாக்கிய கைதி மீது வழக்குப் பதிவு

திருச்சி மத்திய சிறையில் வாா்டரை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:09 AM
கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் வாா்டரை தாக்கிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி மேலவாளாடியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் மகேஸ்வரன் (27). இவா் மீது பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2024 நவம்பா் 3-ஆம் தேதியில் இருந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், மகேஸ்வரன் தனது அறையில் இருந்த மின்விசை இயக்கப் பொத்தான் பலகையை ( ஸ்விட்ச் போா்டு) உடைத்து தற்கொலை செய்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) அதிகாலை முயற்சித்துள்ளாா். அந்த சமயம் அங்கு வந்த சிறை வாா்டா் சிவா அவரைத் தடுத்துள்ளாா். அப்போது, சிறை வாா்டா் சிவாவை கைதி மகேஸ்வரன் தாக்கியுள்ளாா். இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், கைதி சிவா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement