திருச்சி: திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பாலக்கரை ஆலம் வீதி சந்திப்புப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், பாலக்கரை குட்ஷெட் சாலையைச் சோ்ந்த எஸ். நைனா முகமது (27) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.