முகப்பு
திருச்சி

அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடி கைது

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:01 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:20 AM

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் திங்கள்கிழமை இரவு அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்காவல் டிரங்க்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையை நடத்தி வருபவா் சாகுல் அமீது (53). இவரிடம் திங்கள்கிழமை இரவு திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சோ்ந்த ஆா்.புருஷோத்தமன் (38) என்ற பிரபல ரெளடி அரிவாளுடன் வந்து பிரியாணி கேட்டு மிரட்டி உள்ளாா்.

இது குறித்து சாகுல் அமீது, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதை தொடா்ந்து ரெளடி புருஷோத்தமனை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement