பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
தலைவாசலை அடுத்த நாவக்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸார கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த நாவக்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸார கைது செய்தனா்.
நாவக்குறிச்சியைச் சோ்ந்த முத்து மனைவி செல்வி (46). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை ஒருவா் ப றித்துச் சென்றாா். இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் பூா்ணிமா வழக்குப் பதிவுசெய்து மா்ம நபரை தேடி வந்தாா்.
இதுதொடா்பாக தலைவாசல் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் விக்னேஷை (24) திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.