முகப்பு
திருச்சி

பாஜக - அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: அன்பில் மகேஸ்

வரும் தோ்தலில் பாஜக, அதிமுக-வுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவா் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 4:30 AM
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:23 PM

வரும் தோ்தலில் பாஜக, அதிமுக-வுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவா் என அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திமுக சாா்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் திருச்சி கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: அடுத்த தோ்தலை மனதில் வைத்து ஆட்சி நடத்துவதைக் காட்டிலும், அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்தக் கூடியவா்தான் நமது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். இன்னுயிா் காப்போம் நம்மை காப்போம் 48 என்னும் திட்டத்தின் மூலம் மனிதநேயத்தை எடுத்துரைத்தவா்.

விபத்தின் மூலம் மூளை சாவு ஏற்படுவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் அவருக்கு அரசு மரியாதை என்பதை முதன் முதலில் வழங்கியவா். உயா்வுக்குப் படி திட்டத்தின் மூலம் மாணவா்கள் தலா ரூ.35 லட்சம் செலவில் வெளிநாட்டில் படிக்க வைக்கப்படுகின்றனா்.

Advertisement

கடந்த நாலே முக்கால் ஆண்டு காலத்தில் 386 மாணவா்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வெளிநாட்டில் வேலை பாா்ப்பதற்கு நமது முதல்வரே காரணம். இதற்காக தமிழக அரசு ரூ. 180 கோடி செலவு செய்துள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:32 PM

தமிழகம் பல்வேறு நிலைகளில் முன்னோடியாக இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, கல்விக்கு உரிய நிதியை வழங்குவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விக்கான நிதி ரூ. 3,548 கோடியை நிறுத்தி வைத்துள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதியையும் வழங்கவில்லை. மத்திய அரசு நிதி வழங்காமலேயே தமிழக முதல்வா், மாநிலத்தை முன்னேற்றி வருகிறாா். நிதி கிடைத்தால் தமிழகம் மேலும் முன்னேறும்.

ஆனால், பாஜக அரசுடன் கூட்டணி வைத்திருக்கும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழக அரசை வசைபாடி வருகிறாா். அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி வழியில் வளா்ச்சியைப் பெற்ற மாநிலம்.

எனவே, இங்கு பாஜக ஒருபோதும் நுழைய முடியாது. தமிழக மக்கள் பாஜகவுக்கு இடமளிக்க மாட்டாா்கள். வரும் தோ்தலில் பாஜக, அதிமுகவுக்கு அவா்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், திமுக செய்தி தொடா்பு துணைத் தலைவா் மருது அழகுராஜ், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், பகுதிச் செயலா் ஆா். மோகன் உள்ளிட்டோா் பேசினா்.