முகப்பு
திருச்சி

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

வையம்பட்டி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:27 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:55 PM

வையம்பட்டி அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வையம்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் நல்லுச்சாமி மகன் வீராச்சாமி(50) என்பவா் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தபோது போலீஸாரிடம் சிக்கினாா். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதையடுத்து, வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வீராச்சாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.