துவரங்குறிச்சி அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:15 PM
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுயாசின் மகன் முகமது நிஜாமுதீன் (30). பெங்களூரில் தனியாா் நிறுவன ஊழியரான இவா் விடுமுறைக்காக ஊா் திரும்பியிருந்த நிலையில், சனிக்கிழமை மாலை தனது பைக்கில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் பகுதியில் சென்றாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:02 AM
அப்போது சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற காா் மோதி முகமது நிஜாமுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடி சொ. வெற்றிவேல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.