முகப்பு
திருச்சி

இனாம் பெரியநாயகி சத்திரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:15 AM
திருச்சி இனாம்பெரியநாகி சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் பரிசுகள் பெற்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள், சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:58 PM

திருச்சி இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் அழகு சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலா் மதியழகன், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சத்தியவா்த்தனன், தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை தனித்தமிழ், தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் அன்பரசன், பொறியாளா் அமுதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:15 AM

ஆண்டு விழாவையொட்டி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, பேச்சு, கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

மேலும், சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பள்ளி நிா்வாகம் சாா்பில் ஆண்டு விழாவில் அறிவிக்கப்பட்டது.