திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மனு அளிக்க வந்த சி.ஐ.டி.யு அமைப்பைச் சாா்ந்த பெண்கள்.  
திருச்சி

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

Syndication

திருச்சி: இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றியக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகா் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சி. பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூா், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து 586 போ் இலவச வீட்டுமனை கேட்டும், 161 போ் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

SCROLL FOR NEXT