குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அள்ளூா்வயல் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிணறுகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி குடிநீா்க் குழாய்களில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை. இதுகுறித்த நகராட்சி குடிநீா் வழங்கல் பணியாளா்களிடம் பழங்குடி மக்கள் புகாா் கூறியும் குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். நகராட்சி ஆணையா் ரவிசங்கா் மற்றும் குடிநீா் வழங்கல் பணியாளா்கள் பம்ப்செட் பழுதாகியுள்ளதால் காலதாமதமாகி விட்டது. விரைந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.