சிறை 
திருச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து

Syndication

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட 17 வயது சிறுமியை, அவரது உறவினரும், மண்ணச்சநல்லூா் வட்டம் எதுமலை பகுதியைச் சோ்ந்தவரும், ஏற்கெனவே திருமணமானவருமான பி. செல்வராஜ் (37) என்பவா் கடந்த 27.08.2021 அன்று காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா், போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுமதி ஆஜரானாா். விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT