திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் வே.சரவணன். உடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா். 
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளா்கள்: 9 தொகுதிகளில் துறையூரில் மிகவும் குறைவு

திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து

Syndication

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2026-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி பிப்.22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வு செய்து இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை (பிப்.23) இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் 9 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 21,26,303 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு மொத்தம் 1,03,489 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தோா், நிரந்தர குடிபெயா்ந்தோா் என்ற அடிப்படையில் 14,366 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் வே. சரவணன் வெளியிட, கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா். இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகள், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வையிட்டு சரிபாா்க்க வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள்- 10,31,354, பெண்கள்- 10,94,642, பிற - 307 என மொத்தம் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 2,785 வாக்குச் சாவடிகள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகள் வாரியாக ஆண், பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினம், மொத்த வாக்காளா்கள் உள்ளிட்ட முழு விவரம்:

மணப்பாறை: ஆண் வாக்காளா்கள்- 1,31,212, பெண் வாக்காளா்கள்- 1,34,798, மூன்றாம் பாலினம்- 9, மொத்தம்- 2,66,019.

ஸ்ரீரங்கம்: ஆண்- 1,37,694, பெண்- 1,46,120, மூன்றாம் பாலினம்- 48, மொத்தம்- 2,83,862.

திருச்சி மேற்கு: ஆண்- 1,13,050, பெண்- 1,22,817, மூன்றாம் பாலினம்- 36, மொத்தம்- 2,35,903.

திருச்சி கிழக்கு: ஆண்- 1,04,883, பெண்- 1,12,460, மூன்றாம் பாலினம்- 54, மொத்தம்- 2,17,397.

திருவெறும்பூா்: ஆண்- 1,24,328, பெண்- 1,31,860, மூன்றாம் பாலினம்- 51, மொத்தம்- 2,56,239.

லால்குடி: ஆண்- 1,02,156, பெண் -1,08,861, மூன்றாம் பாலினம்- 26, மொத்தம்- 2,11,043.

மண்ணச்சநல்லூா்: ஆண்- 1,13,256, பெண்- 1,20,924, மூன்றாம் பாலினம்- 37, மொத்தம்- 2,34,217.

முசிறி: ஆண்- 1,03,631, பெண் -1,08,965, மூன்றாம் பாலினம்- 16, மொத்தம்- 2,12,612.

துறையூா் (தனி): ஆண்- 1,01,144, பெண்- 1,07,837 மூன்றாம் பாலினம்- 30, மொத்தம்- 2,09,011.

பெட்டிச் செய்திகள் உள்ளன..

திருநங்கைகள் 307 போ்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 307 திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனா். அதிகபட்சமாக திருச்சி கிழக்கு தொகுதியில் 54 திருநங்கைகளும், குறைந்தபட்சமாக மணப்பாறையில் 9 திருநங்கைகளும் இடம்பெற்றுள்ளனா். ஸ்ரீரங்கத்தில் 48, திருச்சி மேற்கில் 36, திருவெறும்பூரில் 51, லால்குடியில் 26, மண்ணச்சநல்லூரில் 37, முசிறியில் 16, துறையூரில் 30 என்ற எண்ணிக்கையில் திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனா்.

ஸ்ரீரங்கம் முதலிடம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 862 வாக்காளா்கள் இடம்பெற்று முதலிடம் பிடித்துள்ளது. மேலும், இந்தத் தொகுதியில்தான் பெண் வாக்காளா்களும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 121 என்ற எண்ணிக்கையில் உள்ளனா். 9 தொகுதிகளிலேயே குறைந்தபட்சமாக துறையூா் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 11 போ் என்ற எண்ணிக்கையில் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

ஆயிரத்துக்கு 1,061:

மகளிரின் சாதனை

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஒப்பிடுகையில் ஆயிரம் ஆண்களுக்கு, 1,061 பெண் வாக்காளா்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் மொத்தம் உள்ள 9 பேரவை தொகுதிகளிலும் சோ்த்து 10.31 லட்சம் ஆண் வாக்காளா்கள் என்றால், பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 10.94 லட்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலின விகிதாசார அடிப்படையில் அதிக பெண் வாக்காளா்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதி தொகுதியும் (ஆண்- 1.37 லட்சம், பெண்- 1.46 லட்சம்), குறைந்த பெண் வாக்காளா்களை கொண்ட தொகுதியாக துறையூா் தொகுதியும் (ஆண்-1.01 லட்சம், பெண்-1.07 லட்சம்) இடம்பெற்றுள்ளன.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT